தென்னகத்தின் கடைக்கோடியில் உள்ள ராமேஸ்வரம், ராமாயண காலப்புகழ் பெற்ற திருத்தலம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இது. காசிக்கு நிகரானது நினைத்தாலே முக்தி தரும் க்ஷேத்ரம். ராமநாதேஸ்வரர் கோயிலில் மூலவர் லிங்கம் மணலாலானது. ராமன் மணல் எடுத்துக் கொடுக்க, சீதாப் பிராட்டியார் அதை லிங்கமாக உருவாக்கினார் என்பது புராணம். அருகிலிருப்பது அனுமன் கொண்டு வந்த லிங்கம். மணல் எடுத்து லிங்கம் பிடித்ததால் இவ்வூரில் ஏர் கொண்டு யாரும் நிலத்தை உழுவதில்லை. இந்த லிங்கம் செக்கு போலக் காட்சி தருவதால் இவ்வூரில் ஏர் கொண்டு யாரும் நிலத்தை உழுவதில்லை. இந்த லிங்கம் செக்கு போலக் காட்சி தருவதால் இவ்வூரில் செக்காடும் வழக்கம் இல்லை. மணலால் மகேஸ்வரன் உருவான தால் மண் எடுத்து சூளை போடுவதும் இங்கில்லை. ராமேஸ்வர வழிபாடும் தனுஷ்கோடியில் நீராடுதலும் செய்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பது வழிவழியாக வழங்கி வரும் சமய மரபு.