சிவபெருமானின் உபதேசம் நிகழ்ந்த திருத்தலங்களைத் தரிசிக்க அறியாமை நீங்கும், கல்வி - கலைஞானம் ஸித்திக்கும் என்பார்கள் பெரியோர்கள். அப்படியான சிவத்தலங்கள் ..
உத்திரகோசமங்கை: உமையம்மைக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் இது. ஓமாம்புலியூர்: இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி, உமாதேவிக்கு, பிரணவப் பொருளை உபதேசித்ததாகப் புராணம் சொல்கிறது. இன்னம்பர்: அகத்தியர், இறைவனிடம் இலக்கண உபதேசம் பெற்ற தலம். ஆலங்குடி: சுந்தரர் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். சிதம்பரம்: பைரவரின் பிரம்ம தத்துவத்தை உபதேசித்த தலம். திருப்பனந்தான்: அம்பாள், சுவாமியிடம் ஞானோபதேசம் பெற்றது. திருக்கடவூர்: பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது. மயிலாடுதுறை: குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்ற ஊர். திருவானைக்கா: அம்பிகை ஞானோபதேசம் பெற்ற திருத்தலம்.