ரங்கநாதப்பெருமாள் கோவிலில் ராமானுஜருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2017 12:05
பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவிலில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, ராமானுஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. குழந்தைகளுக்கு ராமானுஜர் பாசுரங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், ராமானுஜர் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.