பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா ஐந்து நாட்கள் நடந்தன. அத்திபட்டியை சுற்றி 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனை தரிசித்தனர். பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி, கோலாட்டம், கரகாட்டம், முளைப்பாரி, காவடி போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.