பதிவு செய்த நாள்
03
மே
2017
01:05
ஈரோடு: மழை மாரியம்மன் கோவிலுக்கு, மழை வேண்டி, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் சென்றனர். ஈரோடு அசோகபுரம், கலைமகள் வீதியில், மழை மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நேற்று நடந்தது. மழை வேண்டி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். வைராபாளையம் காவிரி ஆற்றில் தொடங்கிய தீர்த்த ஊர்வலம், காமதேனு நகர், பவானி ரோடு, அசோகபுரம் வழியாக கோவிலை அடைந்தது. விழாவில் இன்று, மாவிளக்கு பூஜை, பொங்கல்
வைபவம் நடக்கிறது. நாளை (4ம் தேதி) கம்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சி, இரவு பூப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நாளை மறுநாள் (5ம் தேதி) மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.