பதிவு செய்த நாள்
03
மே
2017
01:05
ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான் பேட்டை புதுமாரியம்மன் கோவில், பூ மிதி விழா ஏப்., 25ல் துவங்கியது. இதை முன்னிட்டு நாள்தோறும் யானை, குதிரை, காமதேனு, சர்ப்பம், குதிரை
உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை, 5:00 மணியளவில், 1,000க்கும் மேற்பட்ட ஆண்கள் தீ மிதித்து, பெண்கள் பூவாரி போட்டுக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மே, 4)கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல், வரும், 5ல் மஞ்சள் நீராடல், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.