பதிவு செய்த நாள்
04
மே
2017
01:05
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக அழகர்கோவிலில்இருந்து புறப்படும் கள்ளழகரை வரவேற்க சாமியாடும் பக்தர்கள் மாலை அணிந்தும், மண்டகப்படிகள் அமைத்தும் தயாராகி வருகின்றனர்.
உத்தரவு பெற்று ஆட்டம்: குரு சாமி , அரும்பனுார்: அழகர் புறப்படும் முன் நாங்கள் ‘திரி’ எடுத்து ஆடி வருவது வழக்கம். எங்கள் தாத்தா சோலைமலை காலம் முதல் ஆடி வருகிறோம். அழகர்மலையானுக்கு பாத்தியப்பட்டு மலையாளத்து வீரன், சின்னவீரன், பெரிய வீரன், ராக்காச்சி, பேச்சியம்மன், நொண்டிச்சாமி என 21 தெய்வங்களை கும்பிடும் இனத்தார்கள் பல தலை முறைகளாக திரி எடுத்து ஆடி வருகிறோம்.
அரும்பனுார்,தேத்தாங்குளம்,புதுப்பட்டி, கொடிகுளம், அ.புதுார் என 7 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆண்டாரிடம் அனுமதி பெற்று ஆடி வருகிறோம். அவரது உத்தரவுப்படி அழகருக்காக சேவை செய்து வருகிறோம். அவரிடம் உத்தரவு பெற்றவர்களே பக்தர்களுக்கு திரிஎடுத்து ஆடி அருள்வாக்கு சொல்ல முடியும். ஏழுமலையானின் ஆசியோடு குறிசொல்லி, பக்தர்களிடமிருந்து பணம், நெல், அரிசி போன்ற தானியங்களை பிச்சைஎடுத்து பெற்றுச்செல்வோம்.இதைவைத்து அழகர் வண்டியூர் வரும்போது பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கிறோம். நாங்கள் திரி எடுத்தும், எங்கள் பேரன், பேத்திகள் தண்ணீர் பீய்ச்சியும் அழகருக்கு சேவை செய்கின்றனர்.
மரியாதை எங்களுக்குதான் ரங்கராசு, ஆண்டார்: அழகர்கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வரும் முன் ஆண்டார் தான் கோயிலின் உரிமையாளர். ஒவ்வொரு திருவிழாவிலும் சுவாமி புறப்படும் முன் அதேபோன்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோயில் இருந்து பட்டர்கள் சுமந்து வருவர். எங்கள் முன்னோர் காலம் முதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. தற்போது நான் ஆண்டாராக உள்ளேன். சுவாமி புறப்படும்போது கொடிமரம் முன் திருவாய்மொழி பாசுரங்கள் சுவாமியை அழைப்போம். கோயிலில் நடக்கும் அனைத்து முதல் மரியாதைகளும் எங்களுக்குதான். அழகர், கருப்பணசுவாமி வேடமிட்டுதிரி எடுத்து ஆடுபவர்கள், கோ டாங்கிகள். ஆண்டார் மண்டப
த்தில் என்னிடம் அருள் பெற்றபிறகு தான் அழகருக்குமுன் சாமியாட செல்வர்.
படி அளக்கும் பெருமாள் விவசாயிமூர்த்தி, காதக்கிணறு: கருங்காலி கம்பு பிடித்து, தீவட்டி ஏந்தி, அரிவாள் பிடித்து அருள் வாக்கு கூறுவார் கருப்பு. அவர் வாசல் நின்றால் அனைத்தும் விலகிவிடும். 18ம்படி கருப்பணசுவாமி காவல் தெய்வமாகஉள்ள மலையில் அழகனாக உள்ளார் அழகர். அழகரை நினைத்தாலே உள்ளம் மகிழும். அழகரை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். நெல், கம்பு, பருத்தி, கடலை , மிளகாய்,சோளம் போன்ற தானியங்கள் காணிக்கையாக செலுத்துவர். வயலில் நெருஞ்சி முள்மண்டி விளைச்சல் பாதித்ததால், நெருஞ்சி முள் காணிக்கை செலுத்தும் அதிசயமும் இங்கு நடந்தது. படி அளக்கும் பெருமாளுக்கு நாம் காணிக்கை செலுத்தாவிட்டால் நமது பூமி காய்ந்து விடும், என்றனர்.