சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2017 01:05
சிவகாசி: சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமானஇக்கோயில் சித்திரை பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்பிகை அலங்கரிக்கப்பட்டு பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முதல் நாள் விழாவை அய்ய நாடார் வகையறாக்கள் சார்பில் நடத்தப்பட்டு வெள்ளி சிங்க வாகனத்தில் அம்பிகை வீதி உலா வந்தார். இரண்டாம் நாள் பயோனியர் குடும்பத்தினர் சார்பில் நடந்த விழாவில் அம்பிகை காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.
மூன்றாம் நாளில் காகா குரூப் ஆப் இன்டஸ் ட்ரீஸ் சார்பில் அம்பிகை வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி நகர் வலம் வந்து கோயிலில் வீற்றீருப்பார். இரவு கைலாசபர்வத வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிப்பார். 4ம் பாவநாச நாடார் வகையறாக்கள் சார்பில் நடக்கும் விழாவில் அம்பிகை வேதாள வாகனத்தில் வீத உலா வந்து அருள்பாலிப்பார். விழாவின் சிறப்பாக நவதானிய வர்த்தர்கள் பண்டு சார்பில் சிவன் சன்னதி முன் கல் மண்டகபடியில் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அம்மன் வீற்றிருந்து அருள் பாலிப்பார். அன்று இரவு சிவகாசி விழா கோலம் பூண்டிருக்கும். சிவகாசி சுற்று கிராம மக்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்து செல்வர். பத்தாம் நாள் விழாவையொட்டி தேர் திருவிழா நடக்கிறது.வேண்டுதல்களை நிறைவேற்றிய பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி, மாவிளக்கு, கயிறு குத்து, முடி, முத்து காணிக்கை, தவழும் பிள்ளை என நேர்த்திகடன் செலுத்துவர். 11ம்நாள் விழாவில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வர விழா நிறைவடைகிறது.