மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை விழா 6 ந்தேதி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2017 02:05
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா வரும் 6 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான பூப்பல்லக்கு வரும் 9ந்தேதி இரவும்,10ந்தேதி வீரஅழகர் கள்ளழகர் வேடமிட்டு வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி,12ந்தேதி தசாவதார நிகழ்ச்சி நடைபெறஉள்ளது.15ந்தேதி சந்தனக்காப்பு அலங்காரத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் முருகேசன், பட்டர்கள் கிருஷ்ணதாஸ், பாபுஜிசுந்தர் செய்து வருகின்றனர்.