பதிவு செய்த நாள்
04
மே
2017
02:05
ஆத்தூர்: சித்திரை மாத விழாவையொட்டி, ஆத்தூர் அருகே, மஞ்சினி, புத்து மாரியம்மன் கோவிலில், கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, அக்னி சட்டி, பூங்கரகம், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், முக்கிய வீதிகளில், ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இரு பக்தர்கள், அலகு குத்தி காரை இழுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு நடந்த தீ மிதி உற்சவத்தில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஆத்தூர், மஞ்சினி, புங்கவாடி, ஒதியத்தூர் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.