பதிவு செய்த நாள்
04
மே
2017
02:05
மோகனூர்: மோகனூர் அடுத்த, என்.புதுப்பட்டி வடக்கு மேட்டில், கருணாம்பிகை உடனுறை குபேர ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும், 7ல் பால்குட அபிஷேக விழா நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, புதுப்பட்டி நல்லக்கிணற்றில் இருந்து, சிவன் சூலாயுதம், அருள்பாலித்து எடுத்து வரப்படுகிறது. காலை, 7:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலில் இருந்து பால் குடம், காவிரி தீர்த்தக்குட ஊர்வலம் கோவிலை அடைகிறது. காலை, 10:30 மணிக்கு, கருணாம்பிகை, குபேர ஈஸ்வரர் சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு ஆராதனை நடக்கிறது. மே, 8 மாலை, 3:00 மணிக்கு நந்தீஸ்வரர், குபேர ஈசுவரர் சுவாமிக்கு, 222வது பிரதோஷ சிறப்பு பூஜை, இரவு, 7:00 மணிக்கு, ருத்ரை பூஜை நடக்கிறது. மே, 10 காலை, 10:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு, 108 குத்துவிளக்கு பூஜை நடக்க உள்ளது.