பதிவு செய்த நாள்
06
மே
2017
12:05
ஆத்தூர்: வாழப்பாடி அருகே, அத்தனூர்பட்டி புதூர் மாரியம்மன் கோவிலில், நேற்று, மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதில், மாரியம்மன் சுவாமியை அலங்காரம் செய்து, பூந்தேரில் முக்கிய வீதிகள் வழியாக, மக்கள் இழுத்துச் சென்றனர். முன்னதாக, அதிகாலை, 5:00 மணிக்கு, 1,008 திருவிளக்கு பூஜையில், பெண்கள் பங்கேற்று, மழை வேண்டி வழிபட்டனர்.
விரதம் இருந்த பக்தர்கள், கேழ்வரகு, கம்மங்கூழ், மோர், தயிர் போன்ற உணவுகளை தயாரித்து எடுத்து வந்து, அம்மனு க்கு படையல் செய்தனர். அவை, அன்னதானமாக பக்தர்களுக்கு
வழங்கப்பட்டது.