பதிவு செய்த நாள்
06
மே
2017
12:05
கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவை ஒட்டி, அம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருவிழா, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்கார பூஜை நடந்தது. பல்வேறு உபயதாரர்கள் மூலம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, நேற்று காலை, 11:00 மணிக்கு,
அபிஷேக மலர் அலங்கார வழிபாடு; பகல், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவாங்கார் சவுடேஸ்வரி நற்பணி மன்றத்தாரின் உபயத்தில், அம்மனின் சிம்ம வாகன ஊர்வலம் நடந்தது.
கோவிலில் இருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், கோத்தகிரி சுற்றுவட்டார மக்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு கட்டமாக, இன்று, 11:00 மணிக்கு, அபிஷேகம், மலர் அலங்கார வழிபாடு, 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு, திருமண வாழ்க்கையில் அதிகம் மகிழ்ச்சியாக இருந்தது, முந்தைய தலைமுறையா அல்லது
இன்றைய தலைமுறையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடக்கிறது.