வடமதுரை: வடமதுரை திருச்சி ரோட்டில் மங்கம்மாள் கேணி அருகில் 100 ஆண்டுகள் பழமையான சர்வ சக்தி விநாயகர் கோயில் உள்ளது. தகர மேற்கூரையுடன் திறந்தவெளியாக இருந்த இக்கோயிலை ஊர்மக்கள் திருப்பணி செய்து கடந்த மார்ச்சில் கும்பாபிஷேகம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை மண்டல பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம், அன்னதானம் நடந்தது.