Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ... சிங்கம்புணரி பிரான்மலையில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையான்குடி கோயிலில் பல கோடி ரூபாய் கலசம் மாயம்: ஓராண்டாக விசாரணை இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2017
01:05

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பழமையான கோயிலில் பல கோடி ரூபாயிலான தங்கம், வைரத்துடன் கூடிய கலசம் மாயாகியது. இதுகுறித்து ஓராண்டாக
விசாரணை இல்லை என, கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாலைக்கிராமம் கீழ்கங்கை ஊரணியில் 500 ஆண்டு பழமையான மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள் விழா நடக்கும். இக்கோயிலில் சாலைக்கிராமம், குயவர்பாளையம், வலசைக்காடு, அய்யம்பட்டி, சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.  

2016 ஜனவரியில் இக்கோயில் கோபுர கலசம் மாயமானது. அதில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதால் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என, கிராமமக்கள் கூறுகின்றனர். மேலும் கலசம் மாயமாகி ஓராண்டாகியும் போலீசார் வழக்கு பதியவில்லை;  விசாரணையும் நடத்தவில்லை என, கிராமமக்கள்  புகார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு சாலைக்கிராமம் பி.ராமன் கூறியதாவது: மாயமாவ கலசத்தின் மதிப்பு குறைந்தது 5 கோடி ரூபாய் இருக்கும். மகாலிங்கம் கோயில் கலசம் மாயமாவதற்கு ஓராண்டிற்கு முன்,
சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் திருக்காமகோடீஸ்வரி சன்னதி கோபுர கலசமும் மாயமானது.

இதன் மதிப்பும் பல கோடி ரூபாய் இருக்கும். இந்த 2 கோயில் கலசங்கள் குறித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கலசங்கள் மாயமானது குறித்து பல சந்தேகங்கள்
கிராமமக்களிடம் நிலவி வருகிறது, என்றார். போலீசார் கூறியதாவது: வரகுனேஸ்வரர் கோயில் கலசம் குறித்து மட்டுமே புகார் வந்துள்ளது. மகாலிங்கம் கோயில் கலசம்
மாயமானது குறித்து யாரும் புகார் தரவில்லை. இருந்தபோதிலும் இரு கலசங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரித்த வருகிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar