பதிவு செய்த நாள்
08
மே
2017
03:05
திருவள்ளூர்: சித்திரை பிரம்மோற்சவத்தில், திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஏழாம் நாள் திருவிழாவான நேற்று, தேரில் வீரராகவர் வீதிவலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசித்தனர்.
திருவள்ளூர், வீரராகவர் பெருமாள் கோவிலில், ஹேவிளம்பி ஆண்டு, சித்திரை பிரம்மோற்சவம் கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள், கருடசேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தினமும், காலை, இரவு இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின்
ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
மேஷ லக்னத்தில், நேற்று காலை, 5:00 மணிக்கு, பெருமாள் தேரில் எழுந்தருளினார்.
காலை, 7:00 மணிக்கு புறப்பட்ட திருத்தேர், முக்கிய வீதிகளில் வலம் வந்து, மதியம், 11:30 மணிக்கு கோவிலைவந்தடைந்தது.
அதன்பின், மாலை, 5:00 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் தேரிலிருந்து எழுந்தருளி, வாகன மண்டபத்தை அடைந்தார். பின், மாலை, 5:30 மணிக்கு பத்தி உலாவும், இரவு, 7:00 மணிக்கு திருமஞ்சனமும் நடந்தது.தொடர்ந்து, இரவு, 10:30 மணிக்கு கோவிலுக்குள் பெருமாள்எழுந்தருளினார்.
எட்டாம் நாளான இன்று காலை, 10:00 மணிக்கு, திருமஞ்சனமும், மாலை, 3:00 மணிக்கு, திருப்பாதம் சாடி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. மாலை, 4:30 மணிக்கு, பத்தி உலா முடிந்து, குதிரை வாகனத்தில், இரவு, 8:00 மணிக்கு வீதி வலம் வருகிறார்.