பதிவு செய்த நாள்
08
மே
2017
03:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் நடந்த தீமிதி விழாவில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி, பழைய திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சந்தன
காப்பு, மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று, காலை 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல்
வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர்.
மாலை, 6:00 மணிக்கு பூகரகம் ஊர்வலத்துடன், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர்.பின், உற்சவர் திரவுபதிஅம்மன் சிறப்பு அலங்காரத்தில்
வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, பகல், 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
தீமிதி திருவிழாவில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன் உட்படமுக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில்
பங்கேற்றதால், திருத்தணி டி.எஸ்.பி., பாலசந்தர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.