பதிவு செய்த நாள்
08
மே
2017
04:05
ஓசூர்: ஓசூரில், பகவான் யோகிராம் சுரத்குமார் பஜனை மந்திர், 17ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.வி.எஸ்., நகர் எதிரே ஸ்ரீராம்ஜி காலனியில், பகவான் யோகிராம் சுரத்குமார் பஜனை மந்திர் உள்ளது. இங்கு,
17ம் ஆண்டு நிறைவு விழா, தத்துவஞானி பெருமாள்ராசு தலைமையில் நேற்று நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 5:30 மணிக்கு அபிஷேக பூஜை, 6:00 மணிக்கு அகண்ட நாம ஜெப துவக்கம், 10:00 மணிக்கு ஜெபம் நிறைவு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, ராம்ஜி பஜனை குழு மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில், பஜனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, ஓசூரை சேர்ந்த கவிஞர் முருககுமரனின் சொற்பொழிவு நடந்தது.
ஓசூர் பகவான் யோகிராம் சுரத்குமார் பஜனை மந்திர் நிர்வாகி சுவர்ணநாதன், ஒருங்கிணைப்பாளர் ரத்தினகுமார், பக்தர்கள் முருகானந்தம், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.