பதிவு செய்த நாள்
08
மே
2017
04:05
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. இதில் இரவு, 9:00 மணிக்கு, மகாலிங்கேஸ்வரர், மங்களாம்பிகை திருக்கல்யாணம் நடந்தது. இன்று (மே, 9) மாலை,
6:00 மணிக்கு மகாலிங்கேஸ்வரர், மங்களாம்பிகை திருவீதி உலா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு விழா குழுவின் சார்பாக பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மே, 9) ஓம் சக்தி அம்மனுக்கு கரக அழைப்பு, கூல் ஊற்றுதல், பொங்கல் வைத்தல் நடக்கிறது. இரவு,
7:00 மணிக்கு பட்டிமன்றம் நடக்கிறது. 10 காலை, 9:30 மணிக்கு பால் குடம் எடுத்தலும், மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை, 6:00 மணிக்கு மாலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு வேல் முருகன், வள்ளி, தெய்வானை திருகல்யாணம் நடக்கிறது. வரும்,
11 காலை, 6:00 மணிக்கு வேல்முருகன், வள்ளி, தெய்வானை திருவீதி உலாவும், மாலை, 4:00 மணிக்கு ஓம் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுக்கும் விழா நடக்கிறது. தொடர்ந்து வாண வேடிக்கை, சிலம்பாட்டம், கரகாட்டம், பம்பை உடுக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.