Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பால் சுரக்கும் கர்ப்பிணி பசு : சேலம் ... புதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு : தொல்லியல் துறை அலட்சியம் புதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
சித்ரா பவுர்ணமி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

10 மே
2017
11:05

இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி அனைத்துக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கோவை மதுக்கரை தர்மலிங்கேசுவர சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமியை யொட்டி சவாமிக்கு பெண்கள் கலச புனித நீர் ஊற்றி வழிப்பட்டனர்.

விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் காலம் காலமாக இருக்கிறது. சித்திரை மாதத்தில் சூரியனின் வெம்மை பகலில் மிகவும் கடுமையாக இருக்கும். அதனால் மக்கள் ஒன்று கூடி, கோடை காலம் முடிந்த பின் போதுமான மழை பெய்ய வேண்டி தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதற்கு ஒரு இரவு நேரத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த இரவில் வெளிச்சம் வேண்டும் என்பதால், முழுநிலவு நாளான சித்ரா பவுர்ணமியைத் தேர்ந்தெடுத்தனர். சித்ரா பவுர்ணமியன்று மட்டுமே நிலா தன் 16 கலைகளையும் பொழியும். இதில் அமிர்தம் இருப்பதாக ஐதீகம். இந்நாளில் நிலவொளியில் இருந்தால் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ஜோதிட ரீதியாகவும் இதற்கு ஒரு காரணம் உண்டு. சூரியன், சந்திரன் இருவரும் ஒருவருக்கொருவர் நேராக ஏழாம் பார்வையாக பவுர்ணமியன்று பார்த்துக் கொள்வர். அப்போது சந்திரனை வழிபட்டால் ஆரோக்கியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் பவுர்ணமி விரதம் இருப்பவர்களின் பிரச்னைகள் சீக்கிரம் தீர்ந்து விடும் என்பர். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் உள்ளிட்ட மலைக்கோவில்களில் கிரிவலம் வருவதும் மனபலத்தை அதிகரிக்கத் தான்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar