பதிவு செய்த நாள்
10
மே
2017
04:05
திருப்பூர் : சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்ர குப்தர் கோவிலில், சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா நடைபெற்றது. காலை, 7:31க்கு, சித்ரகுப்தர் மூலமந்திர யாகம், 1008 மூலிகை திரவிய யாகம், பட்டு வஸ்திர பூர்ணாஹுதி நடைபெற்றன. காலை, 10:30க்கு, 32 வகையான திரவியங்களில், சித்ரகுப்தருக்கு மகா அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பனை வெல்லம், தினை மாவு, கம்பு மாவு, தேன், சுண்டல், கற்கண்டு சாதம் என, 16 வகையான பதார்த்தங்களை படைத்து, சித்ர குப்தர் புராணமும் வாசிக்கப்பட்டது. சித்திரை மாதம் பிறந்தவர்கள், சித்ரா பவுர்ணமி நாளில் நடக்கும் இவ்வழிபாட்டில் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.