மானாமதுரையில் வெண்பட்டு அணிந்து வீரஅழகர் ஆற்றில் இறங்கினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2017 04:05
மானாமதுரை: மானாமதுரையில் வீர அழகர் கோவிலில் கடந்த 6ந்தேதி காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது.முதல் நாள் பேரூராட்சி மண்டகப்படிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.அடுத்த நாள்களில் யானை ,ஹனுமார் வாகனங்களில் எழுந்தருளி வீர அழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் முக்கிய நிகழச்சியான வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக நேற்று இரவு 1 மணி அளவில் பூப்பல்லக்கில் ‘கள்ளழகர்‘ வேடத்தில் எழுந்தருளிய வீர அழகருக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே வைகை ஆற்றுக்குள் மக்கள் எதிர்சேவை நிகழச்சியை நடத்தினர்.அதனையடுத்து பூப்பல்லக்கில் புறப்பட்டு மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோவிலில் தங்கி காலை 7 மணி அளவில் ‘வெண்பட்டு‘ அணிந்து வெள்ளைக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மானாமதுரை நகர வீதிகளில் வலம் வந்தார். பின்னர் ஆனந்தவல்லி அம்மன் கோவிலுக்கு எதிரே சீர் கொடுக்கும் நிகழச்சியை முடித்து காலை 10 மணி அளவில் பக்தர்களின் கோவிந்தோ! கோவிந்தோ! என கோஷங்களுக்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார்.அப்போது அழகர் வேடமிட்டிருந்த பக்தர்கள் சுவாமி மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டனர்.