பதிவு செய்த நாள்
11
மே
2017
03:05
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், மழை வேண்டி மகேஸ்வர யாகம் நேற்று நடந்தது. இதில், 27 நட்சத்திரங்கள், ஒன்பது நவகிரகங்கள், 12 ராசிகளுக்கு என, தனித்தனியாக, 48 யாக குண்டங்கள் அமைத்து யாகம் நடந்தது. ரளிதரசுவாமிகள் இந்த யாகத்தை துவக்கி வைத்தார். மேலும், பல்வேறு ஹோமங்களுடன், 1,116 கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், 500 சன்னியாசிகளுக்கு வஸ்தர தானம், அன்ன தானம் செய்யப்பட்டது.