பதிவு செய்த நாள்
11
நவ
2011
11:11
வதோரா : குஜராத் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அறக்கட்டளை ஒன்று, பசுக்களைப் பாதுகாப்பதற்காக, காப்பகம் ஒன்றை அமைத்துள்ளது. குஜராத் மாநிலம், வதோரா அருகே உள்ள கிராமம் ஏக்கல்பாரா. மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் இக்கிராமத்தில் சந்தை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான சந்தை, நேற்று இங்கு தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், குஜராத் மாநில கவர்னர் கமலா மற்றும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சக்தி சின்ஹா கோஹில் ஆகியோர் கலந்து கொண்டனர். "மத ஒற்றுமை என்ற தலைப்பில் மாநாடும் நடைபெற்றது. ஏக்கல்பாரா கிராமத்தில், மொய்னுதீன் என்ற முஸ்லிம் புனித துறவியின் சமாதி உள்ளது. இந்த சமாதியை பாதுகாத்து, பராமரித்து வரும் முஸ்லிம்கள், அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அறக்கட்டளை, இந்து - முஸ்லிம் மத ஒன்றுமைக்கு எடுத்துக்காட்டாக, பசுக்களைப் பாதுகாக்கும் காப்பகம் ஒன்றை அமைத்துள்ளது. அறக்கட்டளையைச் சேர்ந்த காதீர் பிர்சாடா சஜ்ஜதனஷின் கூறுகையில், ""இந்து - முஸ்லிம் மத ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், நாட்டில் முதல் முறையாக,"கோ சாலை என்ற பசுக்கள் காப்பகம் ஏற்படுத்தியுள்ளோம். 1.75 ஏக்கர் நிலத்தில், இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.