திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிளக்கு பூஜை இரவு 8:00 மணி வரை நடந்தது. ஏற்பாடுகளை கார்த்திகை வழிபாட்டு குழுவை சேர்ந்த செல்லதுரை, பாலசுப்பிரமணியன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.