பதிவு செய்த நாள்
12
மே
2017
03:05
பல்லடம் ;மழை பெய்ய வேண்டியும், பொது நலன் கருதியும், சின்ன வடுகபாளையம் மாகாளியம்மன் கோவிலில், சிறப்பு யாகம் நடந்தது.பல்லடம் அருகே சின்ன வடுகபாளையத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் மழை வேண்டியும், பொது நலன் கருதியும் சிறப்பு யாகம் மற்றும் தவம் நடந்தது. முன்னதாக, கடந்த, 10ம் தேதி மாலை, 5.00 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடந்தது.அன்று மாலை, 6.00 மணிக்கு, மழை ராகத்துடன், திருக்குட நீராட்டு, மழை வேண்டி தவமும் நடந்தது. அதை தொடர்ந்து, ‘மழைநீர் நம் சொத்து’ என்ற தலைப்பில், பேராசிரியர் மதன்குமார் உரையாற்றினார். கோவை மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் சார்பில், மழை வேள்வி யாகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் வெற்றி அறக்கட்டளை நிறுவனத்தினர், இவ்விழாவை ஒருங்கிணைத்தனர். கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.