பதிவு செய்த நாள்
15
மே
2017
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், எமன் கோவில் என அழைக்கப்படும், ஸ்ரீஅரிசாபபயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலின் அரச மரத்தில் தோன்றியுள்ள, விநாயகர் உருவத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு செல்கின்றனர். காஞ்சிபுரம் இந்திரா சாலையில், அரிசாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் எமன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் அருகில் உள்ள , பெ ரிய, அரச மரத்தின் வேரின் அடிப்பாகத்தில், விநாயகரின் உருவம் தெரிவதாக பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். விநாயகரின் உருவத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில், தினமும் எண்ணெய் காப்பும்,அலங்காரமும் செய்யப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தியின் போது, சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் நடத்தப்படுகிறது.
எமன் கோவிலா? காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவிலுக்கு அருகிலும், எதிர் திசையிலும் உள்ளதால், இக் கோவிலை,‘எமன் கோவில்’ என சில பக்தர்கள் அழைக்கின்றனர். இதனால், பயந்து போன பக்தர்களில் சிலர், கோவிலுக்கு அருகில் செல்லும் போது, கைகளால், கண்களை மறைத்த படி செல்கின்றனர். எமனுக்கும், இக் கோவிலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என, இக் கோவிலில்சுவாமி தரிசனம் செய்ய வரும் சிவனடியார்கள் கூறுகின்றனர்.
பழயை வாய்ந்த இக்கோவிலுக்கு,கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஒருவர்,அரச மரத்தின் வேரில் விநாயகர் உருவம் தெரிவதை கண்டு, கோவில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். அன்று முதல், சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறோம். அரச மரத்தில் விநாயகரின் உருவம் தெரிவதாக தகவல் பரவியதையடுத்து, பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆர்.சீனிவாசன், சிவனடியார், காஞ்சிபுரம்.