பதிவு செய்த நாள்
15
மே
2017
12:05
காஞ்சிபுரம்: கோடை விடுமுறையை யொட்டி, நேற்று, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் குடும்பத்துடன், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். கோவில்கள் நகரமான காஞ்சிபுரத்திற்கும், கோடை விடுமுறை துவக்கத்தில் இருந்தே, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பல கோவில்களை காண, வந்த வண்ணம் உள்ளனர். இங்கு, 108 திவ்யதேசங்களில் ஒன்றான, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு, ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், உள்ளூர் பக்தர்களும் அதிகளவில் வந்திருந்தனர்.