பதிவு செய்த நாள்
23
மே
2017
01:05
சிங்கபெருமாள்கோவில்: சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம், நேற்று நடைபெற்றது. கடந்தாண்டு, பருவ மழை தப்பியதால், மாவட்டம் முழுவதும் வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு பருவ மழை பொய்க்காமல் இருக்க, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, முக்கிய கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த, ஆணையர் உத்தவிட்டார். அதை தொடர்ந்து, 14 மற்றும் 17ம் தேதிகளில், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் ஆகிய மாவட்டங்களில், தலா ஆறு கோவில்களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தற்போது, சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் வளாகத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு, பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு, வேள்வி நிறைவடைந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.அதன்பின், பிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவியரும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.