பதிவு செய்த நாள்
24
மே
2017
12:05
ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷத்தையொட்டி நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர், கோட்டை பகுதியில், பழமை வாய்ந்த காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று, பிரதோஷத்தையொட்டி, மாலை, 4:00 மணியளவில் மூலவர் காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், நந்தி தேவருக்கு, சந்தனம், பால், தயிர், நெய், தேன்
உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடந்தன. ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தனர். மாலை 5:30 மணியளவில்,
வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் நந்தி தேவர், காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் அருள்பாலித்தனர். தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை வழிபாடு செய்தனர்.
அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வெள்ளை
விநாயகர் கோவில் சிவன் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.