பதிவு செய்த நாள்
24
மே
2017
02:05
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில், சுப்பையா சுவாமிகள் மடத்தில், மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.இந்தாண்டு அதிக வறட்சி நிலவியதால், திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமி மடத்தில், மழை வேண்டி சிவநேயச் செல்வர்கள், திருவாடுதுறை ஆதின சைவத்திருமுறை பயிற்சி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதில், வேதகிரீஸ்வரர் கோவிலின் ஓதுவார் சொக்கலிங்க தேசிகரின் ஒருங்கிணைப்பில், திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய மழை வேண்டல் திருப்பதிகங்களான திருக்கழுமலம்,
திருவையாறு, திருமுதுகுன்றம், திருவிழிமிழலை, திருக்கச்சி ஏகம்பம், திருப்பறியலூர் வீரட்டம், திருப்பராய்த்துறை ஆகிய திருப்பதிகங்களை பாடி வழிபட்டனர்.