பதிவு செய்த நாள்
24
மே
2017
02:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்தில் நேற்று, கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வைணவ தலங்களில், வைகுண்ட பெருமாள் கோவிலும் ஒன்று. வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள்
சப்பர வாகனத்தில், பெருமாள் எழுந்தருளினார்.முக்கிய நிகழ்ச்சியான நேற்று, கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
காலை, 7:00 மணிக்கு, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் ஜூன், 2ம் தேதி, புஸ்ப பல்லக்கு
உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவுஅடைகிறது.