மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூன் 5ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2017 02:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான திருவாதவூர் திருமறைநாதசுவாமி கோயில் உள்ளது. இவ்வூரில்தான் மாணிக்கவாசகர் பிறந்தார். இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் மே 28 ல் துவங்கி ஜூன் 7 வரை நடக்கிறது. உற்சவ நாட்களின் முக்கிய நாளான ஜூன் 2ல் காலை பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி மேலூருக்கு எழுந்தருளுகிறார். ஜூன் 5ல் மதியம் 12:15 மணிக்கு மேல் மதியம் 12:54 மணிக்குள் திருக்கல்யாணம், ஜூன் 6 ல் காலை 9:00 மணிக்கு திருத்தேர் உலா உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.