மானாமதுரை, மானாமதுரையில் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் உள்ளது.இந்தக் கோயிலில் 1998 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு சோமநாதர் சன்னதியில் வெளிப்புற சுற்றுப்பிரகாரங்கள் மற்றும் கோயிலின் பல இடங்களிலும் கட்டடம் சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள்,பொதுமக்கள் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ஊரின் முக்கிய பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள், ஆகியோர் சிவகங்கை தேவஸ்தானத்தின் அனுமதி பெற்று ஆனந்தவல்லி அம்மன் கோயில் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பை கடந்த 4 வருடங்களுக்கு முன் ஏற்படுத்தி நன்கொடையாளர்களிடம் நிதி வசூல் செய்து கோயிலில் கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர். தற்போது ராஜகோபுரத்தில் மராமத்து பணிகளை செய்வதற்காக சாரம் கட்டும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.