பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2017 12:05
சின்னாளபட்டி, பிள்ளையார்நத்தம் கோயில் திருவிழாவில், ஏராளமான குழந்தைகள் உள்ளிட்டோர் 5 கிலோமீட்டர் துாரத்திற்கு பால்குட ஊர்வலம் நடத் தினர். சின்னாளபட்டி அருகே பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா, மே 16ல் கங்கணம் கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம், நேற்று அதிகாலையில் நடந்தது. இதற்காக, கிராம மக்கள் அனுமந்தராயன்கோட்டை அருகே குடகனாறுக்கு புறப்பட்டனர். பால்குடங்களை வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், பித்தளைப்பட்டி வழியே பிள்ளையார்நத்தத்திற்கு பால்குட ஊர்வலம் நடந்தது. நுாற்றுக்கணக்கான குழந்தைகள் பால்குடத்துடன் ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.