பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகுலம்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2017 06:05
உளுந்தூர்பேட்டை: பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையொட்டி நடந்த நிகுலம்பலா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையொட்டி நிகுலம்பலா யாகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பழ வகைகள், பால், தயிர், நெய்யாக குண்டத்தில் கொட்டப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.