அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2017 04:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சர்வ அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். வைகாசி அமாவாசையை முன்னிட்டு, நேற்று இரவே ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு பின், அக்னி தீர்த்த கடலில் தீர்த்தமாடினர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.