பதிவு செய்த நாள்
26
மே
2017
12:05
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வைகாசி மாத கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற, கந்தசுவாமி கோவிலில், வைகாசி மாத கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதற்காக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்போரூரில் குவிந்தனர். மேலும், முடிகாணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். கிருத்திகை விழாவையொட்டி, காலை மற்றும் மாலை என, இரு வேளையும், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாடவீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.