பதிவு செய்த நாள்
26
மே
2017
12:05
இடையார்பாக்கம்: இடையார்பாக்கம் மகாதேவர் கோவிலில், காவலர் இல்லாததால் அங்கு, பல சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதோடு, கோவில் சீரழியும் அபாயம் உள்ளதாக, பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், இடையார்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, கி.பி., 11ம் நுாற்றாண்டில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் உள்ளது. இங்குள்ள இறைவன், திருப்பாதகாடுடையார் பெயரையே இந்த கிராமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த பெயர் திரிந்து, இடையாற்றுப்பாக்கமாக அழைக்கப்பட்டு வந்ததாக தொல்பொ ருள் துறை பெயர் பலகையில் தெ ரிவிக்கிறது.
இடையாற்றுப்பாக்கம் மற்றும் ராஜ வித்யா தர சதுர்வேதிமங்கலம் என, அழை க்கப்பட்டு வந்த இடையாற்றுப்பாக்கம் பெயரே நாளடைவில், இடையார்பாக்கம் என, மருவியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இங்குள்ள மகாதேவர் கோவில், துாங்காண ை மாட வடிவத்தில் கோபுரமின்றி காணப்படும் சிவன் கோவிலாக காட்சியளிக்கிறது. இந்த கற்கோவிலை பாதுகாக்கும் பணியை , தொல்லியல் துறை கண்காணித்து வருகிறது. இந்த கோவிலை கண்காணிப்பதற்கு, ஒரு காவலரை தொல்லியல் துறை நிர்வாகம் நியமித்துள்ளதாகவும், அவர் கோவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், கோவில் சுவரை, அங்குள்ளவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கோவில் வளாகத்திலிருக்கும் மருத்துவ குணமுடைய செடிகள் போதிய பராமரிப்பு இன்றி கருகியுள்ளது. அதே போல், கோவில் குளத்தின் படித்துறைகள் சிதிலமடைந்துள்ளன. கோவிலுக்கு செல்லும் பாதை ஓரங்களில் சீமை க்கருவேல மரங்கள் புதர் மண்டி உள்ளது. மொத்தத்தில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோவில், சீரழிந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளிப்பதாக பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
படியளக்கும் பரமனுக்கு தண்ணீர் தேவை!
மகா தேவர் கோவிலின் பெருமையை, கிராமவாசிகள் அறியாததால்,கோவில் சீரழிந்தநிலையில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீபம் ஏற்றுகின்றனர். எண்ணெயை சுவரில் தடவி செல்கின்றனர். சுவரில் இருக்கும் கல்வெட்டு எழுத்துக்கள் மறையும் அபாயம் உள்ளது. மேலும், கோவில் வளாகத்தில் இருக்கும் செடிகளுக்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியாமல், மூலிகை செடிகள் கருகியுள்ளன. செடிகளுக்காக தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டகை பம்பு காட்சிபொருளாக மாறி உள்ளது. -பக்தர்கள், மகாதேவர் கே ாவில் முகப்பு தோற்றம். இடம்: இடையார்பாக்கம். இடையார்பாக்கம்