சித்தானந்தா சுவாமி கோவிலில் 29ம் தேதி குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2017 01:05
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 180வது குரு பூஜை விழா, 29ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி, கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 180வது குரு பூஜை விழா, வரும் 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. குருபூஜை தினமான 29ம் தேதி காலை காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 9:30 மணிக்கு கலசப்புறப்பாடு, 10:00 மணிக்கு கலசாபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன் குருக்கள் தேவசேனாதிபதி ஆகியோர் செய்து வருகின்றனர்.