பதிவு செய்த நாள்
27
மே
2017
12:05
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் திருத்தேரை பக்தியுடன் இழுத்து, பக்தர்கள் அம்மன் அருள் பெற்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் மிகப்பழமையானது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து மட்டுமல்லாது, கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இத்திருத்தலத்தில், ஆண்டுக்கு ஒருமுறை அம்மனுக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. இதில், சுற்றியுள்ள, 18 கிராம மக்களும் பங்கேற்கின்றனர். மூன்று நாட்கள் நடக்கும் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளாக நேற்று பக்தர்களும், ஊர் முக்கியஸ்தர்களும், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பக்தியுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மூன்றாவது நாளான இன்று, தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டு, கம்பம் கலைக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து நேற்று இரவு, இன்னிசை நிகழ்ச்சியும், மாஜிக்ேஷாவும் நடந்தது. இன்று இரவு,7:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாளை பகல், 12:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடக்கிறது.