திருப்புல்லாணி கோயில் வெளிப்பிரகாரத்தில் கொட்டப்படும் கழிவுகள்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2017 12:05
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில்மதில் சுவருக்கு வெளியே உள்ள பிரகாரத்தின் நடைபாதை முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. நெய் தீபம் ஏற்றப்படும் மண்சட்டி விளக்குகள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை பாதையோரங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் அதிகளவு கழிவுப்பொருட்கள் தேங்கி, பிரகார வீதியுலா நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. காரைக்குடி பக்தர் நாராயணன் கூறுகையில், கோயிலின் வெளிப்புற பிரகார தெருக்களில் அதிகளவு பிளாஸ்டிக் குப்பை உள்ளன. தினந்தோறும் துப்புரவுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரத்தீர்த்தக்குளத்தின் வடக்குப்பகுதி தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்து கிடக்கிறது. பக்தர்கள் பொழுதுபோக்குவதற்குரிய விளையாட்டுப்பூங்காவினை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். எனவே திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகத்தினர், குறைகளை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் என்றார்.