பதிவு செய்த நாள்
27
மே
2017
12:05
நாமக்கல்: சேந்தமங்கலம் அடுத்த, கொண்டமநாயக்கன்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. கடந்த வாரம், துவங்கிய விழாவுக்காக, நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபி ?ஷக, ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை, அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, மாவீரா சிலம்பாட்ட குழுவினர் சார்பில், சிறப்பு சிலம்பாட்டம் நடந்தது. அதில், சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிலம்பம், வாள் சண்டை, தீப்பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். முடிவில், அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.