பதிவு செய்த நாள்
27
மே
2017
12:05
கரூர்: வைகாசி திருவிழாவை முன்னிட்டு, கரூர் மாரியம்மன் கோவிலில், கம்பத்திற்கு தண்ணீர் ஊற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கரூர், மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றிலிருந்து கோவிலுக்கு கம்பம் எடுத்து வந்து, கோவிலின் முன் நட்டு பக்தர்கள் தண்ணீர், பால் உள்ளிட்ட பொருட்களால் அபி ?ஷகம் செய்து வருகின்றனர். வரும், 31ல் கோவிலிருந்து, கம்பத்தை அமராவதி ஆற்றிற்கு எடுத்து செல்ல உள்ளனர். முன்னதாக, நேற்று கோவிலில் உள்ள கம்பத்திற்கு பக்தர்கள் பால், தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். பின், வேண்டுதலை நிறைவேற்ற மாவிளக்கு ஏற்றினர். இந்த பூஜைகளை செய்வதற்காக, பக்தர்கள் காலை முதலே கையில் பூஜை பொருட்களுடன் கோவில் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வரும், 29 முதல் பக்தர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அக்னி சட்டி, அலகு குத்துதல், பால்குட ஊர்வலம், பறவை காவடி உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்ற உள்ளனர்.