பதிவு செய்த நாள்
27
மே
2017
12:05
செம்பாக்கம் : செம்பாக்கத்தில் கோவில் குளம் துார்வாரும் பணியின் போது, நீர் ஊற்று வந்ததால், பக்தர்கள் பரவசமடைந்தனர். செம்பாக்கம், திருமலை நகர், 8வது தெருவில், பொன்னி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குளத்தை துார்வாரும் பணிகள், நேற்று முன்தினம் துவங்கி, நடைபெற்று வருகின்றன.இந்து மக்கள் கட்சி சார்பில், பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, திருமலை நகர் ஊர் பொதுமக்கள், சிவனடியார்கள், இணைந்து, குளத்தை துார்வாரி வருகின்றனர்.
அதிக அளவில் புல் மண்டி இருந்த கோவிலின் குளம் துார்வாரப்பட்டபோது, குளத்தில் நேற்று திடீரென நீர் ஊற்று ஏற்பட்டது. அதனால் பக்தர்கள், பொதுமக்கள் மழை வேண்டி, பக்தியுடன் வழிபாடு செய்தனர்.இந்த துார்வாரும் பணி, ஒரு வாரம் நடைபெறும் என, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஊர் பொதுமக்களின் முயற்சியால் மட்டுமே துார்வாரும் பணிகள் நடைபெறுவதாகவும், அரசு அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை எழுப்பினர்.