பதிவு செய்த நாள்
27
மே
2017
12:05
முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே கருமலில் எருதாருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேக பணிகள் திருப்பணி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, அனுக்ஞை, விக்னேஸ்வர, தன பூஜைகளுடன், கணபதி, நவக்கிரக ஹோமங்கள், வாஸ்து சாந்தி, பிரசன்னாபிஷேகம், மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், முதற்கட்ட பூஜைகளுடன் துவங்கியது. பூர்ணாகுதி தீபாராதனை நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. கும்பாபிஷேக துவக்கத்தை முன்னிட்டு, கலைநிகழ்ச்சி நடந்தது.