பதிவு செய்த நாள்
27
மே
2017
12:05
காளையார்கோவில், காளையார்கோயில் சோமேஸ்வரர் -சவுந்தர நாயகி அம்மன்கோவில் வைகாசி விசாக விழா மே 28 ம் தேதி இரவு 7:00மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர் பூஜையுடன் துவங்க உள்ளது. 29 ம் தேதி காலை 7:00மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது. ஜூன் 1 ம் தேதி இரவு 6:00 மணிக்கு அம்மன் தபசு காட்சி், 8:00 மணிக்கு கதிர் குளித்தல் நிகழ்வும், 2 ம் தேதி மாலை 5:00 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணமும், 3ம் தேதி காலை 10:00 மணிக்கு சமணர் கழுவேற்றம், 4 ம்தேதி கா 10:30 மணிக்கு பொய்பிள்ளை மெய்பிள்ளை ருத்ர தீர்த்தம், 5ம் தேதி நடராஜர் தரிசனமும் ,6ம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டமும், 7 ம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடைபெறஉள்ளது. ஏற்பாடுகளை ஸ்தானிகம் காளீஸ்வரக்குருக்கள், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ராஜேந்திரன் , ஏஎல்.ஏஆர் அறக்கட்டளை யினர் மற்றும் கிராம பொதுமக்களும் செய்து வருகிறார்கள்.