கீழக்கரை, திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள புல்லாணி அம்மன் கோயிலில் காளியூட்டும் பூஜை நடந்தது. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைப்பதற்கு முன்பாக புல்லாணி அம்மனிடம் சுபயோக உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி, பொங்கலிட்டனர். கோயில் அர்ச்சகர் அரியமுத்து பூஜைகளை செய்தார். ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன், ஜெயராம் பட்டர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.