திருப்பதி ஏழுமலையானுக்கு வியாழக்கிழமையில் பூலங்கி சேவை நடக்கும். சுவாமிக்கு கீழாடை,மேலாடை மெல்லிய வேட்டி அணிவிக்கப்படும்.அதன் மீது மேனி முழுவதும் பூக்களால் ஆன ஆடை அணிவிக்கப்படும்.பூ ஆடையில் பொலிந்து தோன்றியவர் என்னும் குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடக்கும். தண்ணீர், பால், சந்தனத்தால் அபிஷேகம் செய்வர்.சந்தனத்தில் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, புனுகு சேர்ப்பர்.அபிஷேகத்தின் போது ஸ்ரீசூக்தம், புருஷ சூக்தம், நாராயண சூக்தம் ஆகிய மந்திரம் ஜெபிக்கப்படும். பின்னர் பட்டாடை, பொன், வைர ஆபரணத்தால் அலங்கரித்து தீபாராதனை செய்வர். இந்த வழிபாடு விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில்ஏற்படுத்தப்பட்டது.