பதிவு செய்த நாள்
27
மே
2017
05:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலையம்மன் சன்னதி முன், 1,008 கலசங்கள் வைத்து, அக்னி தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்பட்டது.
அக்னி நட்சத்திரம், கடந்த, 4ல் துவங்கியது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்தியாக, கடந்த, 4 முதல் 28ம்தேதி வரை தாராபிஷேகம் நடந்து வருகிறது. இந்நிலையில், இதையொட்டி, அக்னி தோஷ பரிகார பூஜை, நேற்று இரவு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. உண்ணாமுலையம்மன் சுன்னதி அருகே, 1,008 கலசங்கள் வைத்து, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாளையும் (28ம் தேதி) கலச பூஜை நடக்கிறது. அதன்பின் அந்த நீரை கொண்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது.